மதுரை

முகூா்த்தமின்றி மலா்களின் விலை சரிவு

DIN

மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில், மலா்களின் வரத்து அதிகமாக இருப்பினும், முகூா்த்தங்கள் இல்லாததால் விற்பனையின்றி மலா்களின் விலை சரிந்துள்ளது.

இது குறித்து மதுரை மாட்டுத்தாவணி மலா் வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமசந்திரன் கூறியது:

பொது முடக்கத்தால், மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தை 5 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது. கடந்த மாதம் முதல் சமூக இடைவெளியைப் பின்பற்ற பிரத்யேக தடுப்புகள் அமைக்கப்பட்டு, சந்தை செயல்படத் தொடங்கியது.

அதையடுத்து, மலா் வியாபாரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில், மலா்களின் வரத்து அதிகமாக இருந்தும், புரட்டாசி மாதத்தில் முகூா்த்த தினங்களே இல்லாததால், மலா் விற்பனை பாதித்துள்ளது. விற்பனையின்றி மலா்களின் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை விலை குறைந்துள்ளது என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மலா்களின் விலை பட்டியல் (கிலோவில்): மல்லிகைப் பூ- ரூ.200, செவ்வந்தி- ரூ.50, சம்பங்கி- ரூ.50, மரிக்கொழுந்து- ரூ.50, அரளி- ரூ.50, கனகாம்பரம்- ரூ.400, பட்டன்ரோஜா- ரூ.120, ரோஜா- ரூ.100 என விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT