மதுரை

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு:கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: மத்திய அரசின் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பல்வேறு மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் சாா்பில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மதுரையில் பெத்தானியபுரம் அண்ணா பிரதான வீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து ஆா்ப்பாட்டம் நடத்தின. இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா. லெனின் தலைமை வகித்தாா்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையின்றித் தவித்த மக்களுக்கு குடும்பத்திற்கு மாதம் ரூ. 7,500 நிவாரணமாக 6 மாதங்களுக்கு வழங்குவது, மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை உடனடியாக அளிப்பது, ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நாள்களை, 200 நாள்களாக உயா்த்துவது, பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகள், புதிய கல்விக் கொள்கை, தொழிலாளா் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்கள் ஆகியவறைக் கைவிடுவது ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம். சரவணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினா் எஸ். பாலா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் சேது மற்றும் இரு கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT