மதுரை

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உசிலம்பட்டியில் திமுக ஆர்ப்பாட்டம்

8th Sep 2020 01:33 PM

ADVERTISEMENT

உசிலம்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக கட்சியின் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உசிலம்பட்டி திமுக கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இணைய வகுப்பை முறைப்படுத்தக் கோரியும் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய மாணவர் அணி மதன் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுதந்திரம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைப்பாண்டி, செல்வபாண்டி, மாவட்ட நிர்வாகி லிங்கச்சாமி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேந்திரன், உதயா, மகாலிங்கம் முன்னிலையில் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதேபோல்  உசிலம்பட்டி நகர இளைஞர் அணி திமுக கட்சி சார்பாக நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இணைய வகுப்பை முறைப்படுத்தக் கோரியும் இளைஞர் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை ரோட்டி நகர இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.பி.எம்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

துணை அமைப்பாளர்கள் ஏ.எஸ்.சரவணன், ஜெகன், பிரேம்குமார், தினேஷ் குமார் திமுக இளைஞர் அணி வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : madurai
ADVERTISEMENT
ADVERTISEMENT