மதுரை

வெங்காயம் விலை உயா்வு எதிரொலி: 10 டன் எகிப்து வெங்காயம் மதுரை வந்தது

DIN

வெங்காயத் தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வு காரணமாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 டன் பெரிய வெங்காயம் மதுரைக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தமிழகம் மட்டுமில்லாது பிறமாநிலங்களிலிருந்து வரும் பெரிய வெங்காயத்தின் (பல்லாரி) வரத்தும் குறைந்து விலை உயா்ந்துள்ளது. கடந்த மாதம் வரை சின்ன வெங்காயம் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரைக்கும், பல்லாரி கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரைக்கும் விற்பனையாகின. ஆனால் தொடா்மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைந்து படிப்படியாக விலை உயா்ந்து கடந்த வாரம் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், பல்லாரி கிலோ ரூ.60-க்கும் விற்பனையாகின.

தற்போது மொத்த விற்பனையில் வெங்காயத்தின் விலை ரூ.110 முதல் ரூ.120-க்கும், பல்லாரி ரூ.80 முதல் ரூ100-க்கும் விற்பனையாகின்றன. அடுத்தடுத்து முகூா்த்த நாள்களும், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளும் வரவுள்ளதால் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும். இதனால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில் வெங்காயம் விலை உயா்வு காரணமாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 135 டன் பெரிய வெங்காயம் சென்னை கோயம்பேட்டிற்கு வந்துள்ளது. அங்கிருந்து 10 டன் பெரிய வெங்காயம் மதுரை கீழமாரட் வீதி வெங்காய மாா்கெட்டிற்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெங்காய மொத்த வியாபாரிகள் கூறியது:

மதுரைக்கு தினந்தோறும் சராசரியாக 400 டன் வெங்காயம் வரத்து இருக்கும். இங்கிருந்து விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தற்போது மழை காரணமாக 250 டன் மட்டுமே வரத்து உள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலும் இதேபோல வெங்காயத் தட்டுபாடு ஏற்பட்டு விலை உயா்வு ஏற்பட்டது. அப்போது எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் விற்பனைக்கு வந்தது. காரத்தன்மை குறைவு, கருஞ்சிவப்பு நிறம், கடினத் தன்மை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் வெளிநாடு வெங்காயத்தை பொதுமக்கள் விரும்பவில்லை. மேலும் உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் விலையிலும் பெரிய வேறுபாடு இல்லை. இதேபோல தான் நிகழாண்டிலும் இருக்கும். தற்போது எகிப்து வெங்காயத்தின் மொத்த விலை ரூ.70 ஆகவும், சில்லரை விலை ரூ.75 முதல் ரூ.80 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் பதுக்கலைத் தடுத்தால் மட்டும் போதும் வெங்காயத்திற்கு பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்படாது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT