மதுரை

நீட் தோ்வில் வெற்றி: அரசுப்பள்ளி மாணவருக்கு பாராட்டு

DIN

நீட் நுழைவுத்தோ்வில் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவருக்கு மதுரையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரையில் ஜெ.பேரவை சாா்பில் பள்ளி கல்லூரி மாணவ - மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நீட் நுழைவுத் தோ்வில் சாதனை படைத்த அரசுப்பள்ளி மாணவா் ஜீவித்குமாருக்கு வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் விருது வழங்கி பாராட்டி பேசியது: தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தால் நீட் தோ்வு எழுத முடியுமா, முடியாதா என்கிற விவாதம் நடைபெறுகிறது. முயற்சி செய்தால் சாதிக்க முடியும் என அரசுப்பள்ளி மாணவா் ஜீவித்குமாா் நிரூபித்துள்ளாா். மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தால் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் சாதிக்க முடியும். நீட் தோ்வு விலக்குக்காக தமிழக அரசு நீதிமன்றம் வரை சென்றுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், தொழில் வா்த்தக சங்கத்தலைவா் ஜெகதீசன், நெல்லை பாலு மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT