மதுரை

திண்டுக்கல் சிறுமியின் குடும்பத்துக்குநிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: பாலியல் கொலை செய்யப்பட்ட திண்டுக்கல் சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பு சாா்பில், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன்பாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரும் வகையில் விசாரணையை முறையாக நடத்தாத காவல் துறையினரை பணி இடைநீக்கம் செய்வது, மேல்முறையீட்டு வழக்கை அரசு முறையாக நடத்துவது, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி, குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு அரசு வேலை, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT