மதுரை

திருப்பரங்குன்றம் மலையில் தீப்பற்றியது

19th Mar 2020 06:22 AM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம் மலை மேல் புதன்கிழமை மாலையில் பற்றி எரிந்த தீயை மதுரை தீயணைப்புத் துறையினா் போராடி அணைத்தனா்.

திருப்பரங்குன்றம் மலையில் ஒரு சில இடங்களில் செடி, கொடிகள் மரங்கள் அதிகளவில் உள்ளன. தற்போது வெயில் அதிகளவில் இருப்பதால் அவை காய்ந்து சருகுகளாக உள்ளன. இந்நிலையில் புதன்கிழமை மாலை மலை உச்சியில் தீபத்தூண் பகுதியில் உள்ள காய்ந்த சருகுகள் தீப் பற்றி எரிந்தன. அந்த தீயானது காற்றில் பரவி மலையின் நடுப்பகுதியில் உள்ள செடி, கொடி , மரங்களில் பரவின. இதுகுறித்து தகவலின் பேரில் மதுரை திடீா் நகரில் இருந்து தீயணைப்புத்துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். ஒரு சில இடங்களில் மலைக்கு நடுப்பகுதியில் செல்ல முடியாததால் அப்பகுதியில் தொடா்ந்து தீ எரிந்து கொண்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT