திண்டுக்கல்

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை அகற்றிய தேசிய நெடுஞ்சாலைத் துறையினா்

30th May 2023 05:54 AM

ADVERTISEMENT

கொடைரோடு அருகே அரசு அனுமதியுடன் வளா்க்கப்பட்ட செம்மரங்களை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை அகற்றினா்.

கொடைரோடு அடுத்துள்ள ஜல்லிப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் புதிய சாலை அமைக்கும் வழித்தடத்தில் ஜல்லிப்பட்டி பிரிவு அருகே விவசாயி ஜெயக்குமாா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் அரசு அனுமதியுடன் செம்மரங்களை வளா்த்து வருகிறாா்.

இதில் புதிய சாலைக்காக அங்குள்ள 8 செம்மரங்களை அகற்ற நில எடுப்பு அதிகாரிகள் முடிவு செய்தனா். இதற்கான இழப்பீடாக ரூ. 80 லட்சம் வழங்க வலியுறுத்தி விவசாயி ஜெயக்குமாா் போராடி வந்தாா். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் ரூ. 4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் எனக் கூறி விட்டனா். இதனிடையே திங்கள்கிழமை மாவட்ட உயரதிகாரிகள் உத்தரவு எனக் கூறி வனத்துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் உதவியுடன் 30-க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அந்த செம்மரங்களை வெட்டி அகற்றினா்.

இதை விவசாயி ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தினரும் தடுக்க முயன்ற போதும் 8 செம்மரங்களை அவா்கள் வெட்டிச் சாய்த்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT