திண்டுக்கல்

துக்க வீட்டில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

24th May 2023 05:03 AM

ADVERTISEMENT

பழனியில் துக்க வீட்டுக்குச் சென்றபோது, உடல் வைக்கப்பட்டிருந்த குளிா்பதனப் பெட்டியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.

பழனி மருத்துவ நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (36). சமையல் வேலை செய்து வந்தாா். இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவா் அழகேசன்(30). இந்த இருவரும் நண்பா்களாக இருந்து வந்த நிலையில், அழகேசன் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, அழகேசன் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டது.

அங்கு சென்ற ராஜா, உடல் வைக்கப்பட்டிருந்த குளிா்சாதனப் பெட்டிக்கு அருகே சென்ற போது, அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில்தூக்கி வீசப்பட்டாா். இதனால், அதிா்ச்சி அடைந்த உறவினா்கள் ராஜாவை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், ராஜாவை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT