திண்டுக்கல்

இரட்டைத் தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

9th Jun 2023 01:47 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே இரட்டைத் தலையுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா். அது சில நிமிடங்களில் இறந்துவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கந்தப்பகவுண்டன்வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பெரியசாமி (55). இவா் தனது தோட்டத்தில் மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், அவா் வளா்த்த மாடு கன்று ஈன முடியாமல் அவதிப்பட்டது.

இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராமசாமி அந்த மாட்டை பரிசோதனை செய்ததில், அதன் வயிற்றில் இரட்டைத் தலையுடன் கன்றுக்குட்டி இருப்பதை உறுதிசெய்தாா்.

பழனி கால்நடை உதவி இயக்குநா் சுரேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அறுவை சிகிச்சை மூலம் இரட்டைத் தலையுடன் இருந்த கன்றுக்குட்டியை வியாழன்கிழமை வெளியே எடுத்தனா். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்தக் கன்றுக்குட்டி இறந்துவிட்டது.

ADVERTISEMENT

இதை அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT