திண்டுக்கல்

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

6th Jun 2023 04:30 AM

ADVERTISEMENT

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி, நத்தம் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது:

நத்தம் அருகேயுள்ள பன்னுவாா்பட்டி, சிறுகுடி, நடுமண்டலம் உள்ளிட்ட ஊராட்சிகளில், புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். இதேபோல சாணாா்பட்டி, நிலக்கோட்டை வட்டாரங்களில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT