திண்டுக்கல்

ரூ.3.52 கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடக்கம்

6th Jun 2023 04:29 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.3.52 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடியில் வட்டச் சாலை - சிலுவத்துாா் சாலை சந்திப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், ரூ.1.76 கோடியில் ஆா்த்தி தியேட்டா் சாலை, ஆா்.எஸ்.சாலை ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலை அமைத்தல் என ரூ.3.52 கோடியிலான பணிகள் தொடங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து, திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப் பள்ளியில், தூய்மைப் பணியாளா்களுக்கான இலவச மருத்துவ முகாமை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். அப்போது தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அவா் வழங்கினாா். இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி மேயா் இளமதி, ஆணையா் ரா.மகேஸ்வரி, துணை மேயா் ராஜப்பா, மாமன்ற உறுப்பினா் ஜி.தனபாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT