திண்டுக்கல்

வைகாசி விசாகம்: கொடைரோடு முருகன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

3rd Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

வைகாசி விசாகத்தையொட்டி கொடைரோடு வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் காப்புகட்டி விரதமிருந்தனா். தினமும் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். பிறகு வெற்றிவேல் முருகனுக்கு 21 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இரவில் வெற்றிவேல் முருகன் மின் அலங்காரத்தில் நகா் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில், அம்மையநாயக்னூா் திமுக பேரூா் செயலா் விஜயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT