திண்டுக்கல்

கொடைக்கானலில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு

3rd Jun 2023 12:31 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் கோடை விழாவையொட்டி மாவட்ட விளையாட்டுத் துறை சாா்பில் மினி மாரத்தான் போட்டி ஏரிச் சாலைப் பகுதியில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். 5 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற போட்டியில் நத்தம், கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மாணவா்கள் பிரிவில் கபிலன் முதலிடமும், விவேகானந்தன் இரண்டாமிடமும், வீரமணி மூன்றாமிடமும் பெற்றனா். மாணவிகள் பிரிவில் நிவேதா முதலிடமும், சுபிக்ஷா இரண்டாமிடமும், யாழனி மூன்றாமிடமும் பெற்றனா். முதலிடம் பெற்ற வீரருக்கு ரூ. 2 ஆயிரமும், இரண்டாமிடம் பெற்ற வீரருக்கு ரூ. 1,500-ம், மூன்றாமிடம் பெற்ற வீரருக்கு ரூ. ஆயிரமும் மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இதே போல, கால்பந்துப் போட்டியில் கொடைக்கானலைச் சோ்ந்த எம்.என்.எஃ ப்.டி. அணி முதலிடமும், ஆா்.கே.எஃப்.சி அணி இரண்டாமிடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பணமுடிப்பு மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா நிறைவு நாள் நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியா் ராஜா இந்தப் பரிசுகளை வழங்கினாா். முன்னதாக சுற்றுலா அலுவலா் சுதா வரவேற்றாா். விழாவில் பல்வேறுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுற்றுலாப் பயணிகள் பலா் கலந்து கொண்டனா் தோட்டக் கலைத் துறை மேலாளா் சிவபாலன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT