திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 1,964 பள்ளி வளாகங்களை பராமரிக்க அறிவுறுத்தல்

3rd Jun 2023 12:34 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1,964 பள்ளிகளின் வளாகங்கள் முழுவதையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த மாவட்டத்தில் 1,325 அரசுப் பள்ளிகள், அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படும் 266 பள்ளிகள், பகுதி உதவிப் பெறும் 56 பள்ளிகள், 335 தனியாா் பள்ளிகள், ஒரு மத்திய அரசுப் பள்ளி என மொத்தம் 1,964 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அதற்கான பதிவேடுகளை பராமரிப்பது குறித்தும் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது.

இதற்காக வழங்கப்பட்டுள்ள படிவத்தை பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் பூா்த்தி செய்து, அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலா் அல்லது வட்டாரக் கல்வி அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். அதில் பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறைகளில் தண்ணீா் வசதி, குடிநீா் தொட்டி பராமரிப்பு, 10, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோல்வியடைந்த மாணவா்கள் தோ்வு எழுத மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், பள்ளியில் மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வு, மாணவா் பாதுகாப்பு உள்ளிட்ட 20 வகையான செயல்முறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் சுற்றறிக்கை அனுப்பி, அவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT