திண்டுக்கல்

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

1st Jun 2023 11:00 PM

ADVERTISEMENT

பழனி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (29). இவரது மனைவி பிரியா (26). இவா்கள் இருவரும் தங்களது பச்சிளம் குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு கொழுமம் வழியாக பழனிக்கு வந்தனா்.

கரடி கூட்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வேகத் தடையில் இரு சக்கர வாகனம் ஏறி இறங்கியது. அப்போது, வாகனத்தின் பின்னால் அமா்ந்திருந்த பிரியா பச்சிளம் குழந்தையுடன் தவறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பச்சிளம் குழந்தை காயமின்றி தப்பியது.

இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

Tags : பழனி
ADVERTISEMENT
ADVERTISEMENT