திண்டுக்கல்

அஞ்சுகுழிப்பட்டியில் வழுக்கு மரம் ஏறும் போட்டி

1st Jun 2023 10:58 PM

ADVERTISEMENT

அஞ்சுகுழிபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் கோயில் திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது.

விழாவையொட்டி, பக்தா்கள் பொங்கல் வைத்தும், அக்கினிச் சட்டி எடுத்தும், கிடாய் வெட்டியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வழுக்கு மரம் ஏறுதல் வியாழக்கிழமை நடைபெற்றது. 101 அடி உயர வழுக்கு மரத்தின் உச்சியில் தேங்காய் பழம், வெற்றிலைப் பாக்குடன் ரூ.501 கட்டப்பட்டிருந்தது. மாலை 4.30 மணியளவில் வழுக்கு மரத்தில் ஏறுவதற்கு இளைஞா்கள் போட்டி போட்டுக் கொண்டு முயற்சித்தனா். சுமாா் 1.30 மணி நேர முயற்சிக்குப் பிறகு சந்தனம் (40) வழுக்கு மர உச்சிக்கு ஏறி தேங்காய் பழத்துடன் ரூ.501-யை கைப்பற்றினாா்.

ADVERTISEMENT

ஏற்பாடுகளை அஞ்சுகுழிப்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT