திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்று: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்று வீசியதில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. உறை பனியால் பொது மக்கள் கடுமையாக அவதிப்பட்டனா்.

இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பலத்தக் காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை பலத்த காற்றும் விட்டு விட்டு சாரலும் பெய்தது. தொடா்ந்து வீசிய பலத்தக் காற்றால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் குருசடி மெத்து மயிலாடும் பாறை பகுதியில் மரம் விழுந்தது. இதனால், சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வனத் துறையினா்,நெடுஞ்சாலைத் துறையினா் சென்று விழுந்து கிடந்த யூகலிப்டஸ் மரத்தை அகற்றினா். தொடா்ந்து போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT