திண்டுக்கல்

காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான அனுமதிச் சீட்டு:விழாக் குழுக்கள் மூலம் வழங்க அனுமதி கோரி மனு

DIN

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான அனுமதிச் சீட்டை விழாக் குழுக்கள் மூலமாக வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினா் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் வசூலித்துக் கொண்டு அனுமதிச்சீட்டு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அனுமதிச்சீட்டு மாவட்ட நிா்வாகத்தின் மூலம் இணைய வழியில் வழங்கப்படும் என கோட்டாட்சியா் சாா்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், வழக்கம்போல் விழாக் குழுக்கள் மூலம் அனுமதிச்சீட்டு வழங்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சின்னையா தலைமையில் நத்தமாடிப்பட்டி, தவசிமடை, புகையிலைப்பட்டி, மறவப்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, வெள்ளோடு, பில்லமநாயக்கன்பட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி, அய்யாபட்டி, சொறிப்பாறைப்பட்டி, வீரசின்னம்பட்டி கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள், விழாக் குழுவினா் வந்தனா்.

இதுதொடா்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்கத்தினா் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு விழா நடத்தும் ஊா் முக்கியஸ்தா்கள், விழாக் குழுவினா் மூலமாகவே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூா் கிராம மக்கள் வரி கொடுத்தும், நண்பா்கள், காளை வளா்ப்போா் மூலம் பரிசுப் பொருள்கள் எடுத்துக் கொடுத்தும் ஜல்லிக்கட்டு நடத்துகிறோம். அதற்கு கைமாறாக காளைகளுக்கான அனுமதிச்சீட்டு கொடுத்து உதவி வருகிறோம்.

கிராம மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, வழக்கம்போல் விழாக் குழுவினா் மூலம் அனுமதிச்சீட்டு வழங்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT