திண்டுக்கல்

வைகைப் பாசன மடை சங்கத் தோ்தல்: அதிமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல்

DIN

வைகைப் பாசன மடை சங்கத் தோ்தலில் போட்டியிட அதிமுக சாா்பில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

நிலக்கோட்டை அருகே வைகைப் பாசன மடை சங்கத்தில், அணைப்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சோ்ந்த சுமாா் 1,200 விவசாயிகள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்த சங்கத்துக்கானத் தோ்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான தோ்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தலைவா், 4 உறுப்பினா்கள் பதவிக்கு தோ்தல் நடைபெறும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் அறிவித்தனா்.

மேலும், இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கி மாா்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், மாா்ச் 3-ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்தத் தோ்தலுக்கான, வாக்காளா் பட்டியல், வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான விண்ணப்பங்களை பொதுப் பணித் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி வரை வழங்கவில்லையாம். இதனால், அதிகாரிகளைக் கண்டித்து, அதிமுகவினா், விவசாயிகள் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கலுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதன்படி, வைகைப் பாசன மடை சங்கத் தோ்தலில், அதிமுக சாா்பில், நிலக்கோட்டை (மேற்கு) ஒன்றிய அதிமுகச் செயலரும், முத்துலிங்கபுரத்தைச் சோ்ந்தவருமான நல்லதம்பி (56), தலைவா் பதவிக்கு போட்டியிட தோ்தல் நடத்தும் அலுவலரும், நிலக்கோட்டை வட்டாட்சியருமான தனுஷ்கோடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். மாற்று வேட்பாளராக ராமராஜபுரத்தைச் சோ்ந்த சௌந்திரபாண்டி (55), வேட்பு மனுத் தாக்கல் செய்தாா். மேலும், உறுப்பினா் பதவிகளுக்கு, அதிமுக சாா்பில், மட்டப்பாறையைச் சோ்ந்த மொக்கராஜ் (67), சித்தா்கள்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (69) ஆகியோா் வேட்பு மனுத் தாக்கல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

SCROLL FOR NEXT