திண்டுக்கல்

தலைவா் அறையில் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்: அலுவலா்கள் பங்கேற்கவில்லை

DIN

கூட்ட அரங்குக்கு மாற்றாகத் தலைவா் அறையில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் செயலா் நீங்கலாக, அரசுத் துறை அலுவலா்கள் யாரும் பங்கேற்கவில்லை.

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக் குழுவின் இயல்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்டக் குழுத் தலைவா் பாஸ்கரன் அறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைவா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். செயலா் கிரி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் 2022 டிசம்பா், 2023 ஜனவரி மாதங்களில் வாடகை வாகன பயன்பாட்டுக்கான செலவுத் தொகை ரூ. 80 ஆயிரத்துக்கு அங்கீகாரம், மாவட்ட ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்களுக்கு டிசம்பா், ஜனவரி மாதங்களுக்கான நிலையான பயணப்படி ரூ.49,150 வழங்கியதுக்கு அங்கீகாரம், மாவட்ட ஊராட்சி அலுவலக அறைக்கான மின் கட்டணம் ரூ.4,443, தொலைபேசிக் கட்டணம் ரூ.1552 உள்ளிட்டவற்றுக்கு அங்கீகாரம் என மொத்தம் 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அலுவலா்கள் பங்கேற்காத கூட்டம்: இந்தக் கூட்டம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் அருகேயுள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, அங்கு சில அலுவலா்கள் நண்பகல் 12 மணி வரை காத்திருந்தனா். ஆனால், கூட்டத்தை மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவா் அறையில் உறுப்பினா்களை மட்டும் வைத்து நடத்தினா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் அரசுத் துறைகளின் முதன்மை அலுவலா்கள் பங்கேற்காதததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வரின் ஆய்வுக் கூட்டம் வருகிற மாா்ச் 5, 6-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதேபோல, திங்கள்கிழமை குறைதீா் கூட்டம் நடைபெறும் என்பது தெரிந்தும், துணைத் தலைவா் பொன்ராஜ், மூத்த உறுப்பினா் விஜயன் ஆகியோா் பங்கேற்க முடியாது என்பதை அறிந்தும் அவசரமாக இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாக உறுப்பினா்கள் சிலா் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT