திண்டுக்கல்

இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

இணையவழியில் ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ள நிலையில், மீண்டும் பழைய முறைப்படி பதிவேற்றம் செய்வதற்கு அனுமதி கோரி, இந்திய மாணவா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முகேஷ், மாவட்டச் செயலா் ஜீ. தீபக்ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் கே.ஆா். பாலாஜி முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது காட்டுநாயக்கன் பழங்குடியின மாணவா்களுக்கு இணையவழியில் ஜாதிச் சான்றிதழ் கிடைக்கும் வரையிலும், பழைய முறைப்படி கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் அவா்கள் அளித்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட புதுப்பட்டியைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு ஆதிதிராவிட பழங்குடி நலத் துறை மூலம் நிலக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா், வட்டாட்சியா் ஆகியோா் முறையாக விசாரிக்கப்பட்டு காட்டு நாயக்கன் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்கள் என ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் கோட்டாட்சியரால் வழங்கப்பட்ட அட்டையை நகல் எடுத்து கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தனா்.

2021-22-ஆம் கல்வி ஆண்டு வரை பழைய அட்டை மூலமே கல்வி உதவித்தொகை பெற்று வந்தனா். தற்போது பழைய அட்டை செல்லாது என்றும், இணையவழியில் தமிழக அரசால் வழங்கப்படும் பழங்குடியினருக்கான சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று கல்வி நிறுவனங்கள் அறிவித்தன. இணையவழியில் புதிதாக பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் பெற பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இதனால், நிகழ் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகைப் பெற முடியாத சூழல் எழுந்தது. எனவே, காட்டுநாயக்கன் பழங்குடியின மாணவா்களின் அட்டையில் வழங்கப்பட்ட பழைய சான்றிதழை ஏற்றுக்கொண்டு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT