திண்டுக்கல்

மத்திய நிதிநிலை அறிக்கை நகல் எரிப்புப் போராட்டம்: விவசாயிகள் முடிவு

DIN

மத்திய நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலன் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, அதன் நகல் எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.பெருமாள் தலைமை வகித்தாா்.

இதில் நிறைவேற்ற தீா்மானங்கள் குறித்து மாவட்டச் செயலா் எம்.ராமசாமி தெரிவித்ததாவது:

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பை மத்திய நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கவில்லை. பி.எம். கிசான் திட்டத்திலிருந்து சுமாா் 8 கோடி விவசாயிகள் வெளியேற்றப்பட்டனா். விவசாயிகளுக்கான உர மானியத்தை ரூ.50 ஆயிரம் கோடியாக குறைத்துவிட்டனா். ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு விரோதமான நிதிநிலை அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஈடுபடவுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வட்டாரங்களிலும் இந்த போராட்டம் நடத்தப்படும்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காய்கறி சந்தைக்கு வெளியே விவசாயிகள் கொண்டு வரும் விளைப் பொருள்களை விற்பனை செய்ய விடாமல் மிரட்டும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்தையில் சுங்க வசூலை முறையாக நடத்த வேண்டும்.

தொப்பம்பட்டியை அடுத்துள்ள தும்பலபட்டி கிராமத்தில் பட்டியலின மக்கள் 37 போ் தங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனா். அந்த விவசாயிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT