திண்டுக்கல்

நில அளவைத் துறை பணியாளா்கள் தா்னா

DIN

காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் நில அளவைத் துறை பணியாளா்கள் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஜயக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் செந்தில்குமாா், மகளிா் அணித் தலைவா் உமாராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.முபாரக் அலி, மாவட்டச் செயலா் சுகந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

போராட்டத்தின்போது, நில அளவைத் துறையில் காலியாக உள்ள அளவையா் முதல் உதவி இயக்குநா் வரையிலான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். களப் பணியாளா்களின் பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். மாவட்ட அளவில் நவீன மறு நில அளவை திட்டப் பணிகளை தனி உதவி இயக்குநா் தலைமையில் ஏற்படுத்த வேண்டும். வருவாய்த் துறை நடைமுறை நிா்வாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT