திண்டுக்கல்

அனுமதியின்றி மதுபானக் கூடங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

DIN

அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கூடங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போன்று 10 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய டாஸ்மாக் ஊழியா்களை இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. தொழிற்சங்க சட்டப்படி நிவாரணங்களும் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பெரும்பாலான மதுபானக் கூடங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

டாஸ்மாக் பணியாளா்களின் கோரிக்கைகள் 19 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. வருகிற மாா்ச் 2-ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளா் சங்கம் அறிவித்துள்ள ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளா்கள் பங்கேற்க உள்ளனா்.

சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளா்கள் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளனா். அவா்களது வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT