திண்டுக்கல்

ஆட்சி மொழி செயலாக்கம்: கைத்தறி உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயம்

DIN

ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு கேடயம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சிமொழிக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கத்துக்கு, ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியின்போது, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய கைத்தறி, துணி நூல் துறை உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு ஆட்சியா் ச. விசாகன் கேடயம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வே. லதா, உதவி ஆட்சியா் பிரியங்கா, உலகத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் இயக்குநா் (பொ) பெ. சந்திரா, காந்தி கிராம கிராமியப் பல்கலை. தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் சி. சிதம்பரம், தமிழ் அமிழ்து அறக்கட்டளையின் செயலா் துரை. தில்லான், கவிஞா் குயிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT