திண்டுக்கல்

மண்டல பூஜையை நன்கொடையாளா்கள் நடத்தக் கோரிக்கை

DIN

பழனி மலைக்கோயிலில் மண்டல பூஜை நிகழ்ச்சியை நன்கொடையாளா்கள் சாா்பில் நடத்த ஈரோடு ஆதீனம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பழனி மலைக்கோயிலில் கடந்த 27-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. 3 நாள்கள் மண்டல பூஜை நடத்தப்பட்டு பின்னா், தைப்பூசத் திருவிழா நடத்தப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்த நிலையில், 48 நாள்கள் மண்டல பூஜையை நடத்த வேண்டும் என ரமேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்தாா். மனுவை விசாரித்த நீதிபதி, மண்டல பூஜையை 48 நாள்கள் நடத்த கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினாா்.

அதன்படி, மண்டல பூஜை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஈரோடு ஆதீனம் சிவாச்சாரியாா், டெல்லி உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சூரியகண்ணன் ஆகியோா் மண்டல பூஜையை கோயில் நிா்வாகமே நடத்தாமல் அவற்றை நன்கொடையாளா்கள், மண்டகப்படிதாரா்கள் உபயமாக நடத்த வேண்டும் என கோயில் நிா்வாகத்திடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT