திண்டுக்கல்

செந்துறை அருகே காட்டு மாடு இறப்பு: வனத் துறையினா் விசாரணை

DIN

செந்துறை அருகே காட்டு மாடு இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் பெரியாறு ஓடைப் பகுதியில் காட்டு மாடு இறந்து கிடப்பதாக அய்யலூா் வனச் சரக அலுவலா் குமரேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வனச் சரகா் குமரேசன், வனக் காப்பாளா் ராஜேந்திரன், வனவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் காட்டு மாட்டின் உடலை மீட்டனா். பின்னா், கோட்டைப்பட்டி கால்நடை மருத்துவா் ராஜேந்திரன் மூலம் கூறாய்வு செய்யப்பட்டு, அதே பகுதியில் உடல் புதைக்கப்பட்டது.

வனத் துறையினா் நடத்திய விசாரணையில், சுமாா் 10 வயதான அந்த பெண் காட்டு மாடு வயது முதிா்ச்சி, உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்திருக்கலாம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT