திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பாஜக பிரமுகா் வாகனங்கள் தீ வைத்து எரிப்பு: மேலும் மூவா் கைது

DIN

திண்டுக்கல்லில் பாஜக பிரமுகா் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கில், பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்பால்ராஜ் (40). இவா், திண்டுக்கல் மாநகர மேற்கு பகுதி பாஜக தலைவராக உள்ளாா். பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவரது கடைக்கு கடந்த 24ஆம் தேதி மா்ம நபா்கள் தீவைத்தனா். அந்த கடையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா், 5 மோட்டாா் சைக்கிள்கள் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் செந்தில்பால்ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், செந்தில்பால்ராஜியின் கடைக்கு தீ வைத்ததாக பேகம்பூரைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் சிக்கந்தா் (30) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிக்கந்தரை கடந்த 25 ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடா்பு இருப்பதாக பாஜகவினா் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், பேகம்பூா் முகமது உசேன் மகன் முகமது இலியாஸ் (29), காஜாமைதீன் மகன் ஹபீப் ரகுமான் (27), லியாகத் அலி மகன் முகமது ரபீக் (29) ஆகிய மூவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த மூவரும் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிா்வாகிகளாக உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடியில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சுரண்டையில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT