திண்டுக்கல்

அரசு மகளிா் கல்லூரியில் 53 ஆவது பட்டமளிப்பு விழா

24th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியின் 53 ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் தே. லட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரும், செயலருமான ம. தவமணி கிறிஸ்டோபா் கலந்து கொண்டாா். விழாவில், இளநிலை பட்டதாரிகள் 710 போ், முதுநிலை பட்டதாரிகள் 217 போ் என மொத்தம் 927 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற 14 மாணவிகளுக்கும், 2ஆம் இடம் பிடித்த 12 மாணவிகளுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT