திண்டுக்கல்

நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூட வாகனத்தில் 1 மணி நேரத்தில் பரிசோதனை முடிவு

DIN

நடமாடும் உணவு பகுப்பாய்வுக் கூட வாகனத்தில் 11 வகையான உணவுப் பொருள்களை பகுப்பாய்வு செய்து ஒரு மணி நேரத்தில் தரத்தினை அறிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலா் சிவராம பாண்டியன் தெரிவித்தாா்.

இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையத்தின் மூலம் உணவு கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் 2 நடமாடும் உணவு பகுப்பாய்வுக்கூட வாகனங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில், மதுரை மண்டலத்துக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இந்த வாகனத்தில் உணவுப் பகுப்பாய்வு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறையின் திண்டுக்கல் மாவட்ட நியமன அலுவலா் சிவராம பாண்டியன் கூறியதாவது: உணவுப் பொருள்களில் உள்ள கலப்படம் குறித்து கண்டறியும் எளிய பரிசோதனை வசதிகளுடன் கூடிய இந்த வாகனம், திண்டுக்கல் மாவட்டத்தில் அக். 28 ஆம் தேதி வரை பல்வேறு வட்டாரங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

பால், நெய், எண்ணெய், தேயிலைத்தூள், மிளகாய்த்தூள் உள்ளிட்ட 11 வகையான உணவுப் பொருள்களை பகுப்பாய்வு செய்து அதற்கான தரத்தினை ஒரு மணி நேரத்தில் பெறும் வகையில் இந்த வாகனத்தில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுகாதாரமான உணவுத் தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருள்களில் முகப்புச்சீட்டில் (லேபிள்) உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி மற்றும் இதர விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது. இந்த வாகனத்தில் பகுப்பாய்வு செய்யப்படும் உணவுப் பொருள்கள் தரமற்ாக இருந்தால், உணவு பாதுகாப்புத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 9444042322 என்ற கைப்பேசி எண்ணில், தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்றாா்.

அப்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT