திண்டுக்கல்

மு.க. ஸ்டாலின் கருத்துக்கு பாஜக வரவேற்பு

7th Oct 2022 12:10 AM

ADVERTISEMENT

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என முதல்வா் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை பாஜக வரவேற்பதாக அந்தக் கட்சியின் சிறுபான்மை அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராகிம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியைச் சோ்ந்த பாஜக நிா்வாகி செந்தில்பால்ராஜுக்கு சொந்தமான, கடை மற்றும் வாகனங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த நிலையில், குடைப்பாறைப்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலா் வேலூா் இப்ராகிம், பாதிக்கப்பட்ட செந்தில்பால்ராஜை சந்தித்துப் பேசினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக மாநில நிா்வாகிகள், மாவட்டத் தலைவா்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், மாநில அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல திமுக என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளதை பாஜக வரவேற்கிறது. சில அமைச்சா்கள், எம்பி.க்களின் செயல்பாடு, இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை சித்தரித்து வருகிறது. இதை மாற்ற திமுக தலைமை முன் வர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

அப்போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி. தனபாலன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT