திண்டுக்கல்

செட்டியபட்டியில் கிராம சபைக் கூட்டம்: அமைச்சா் ஐ.பெரியசாமி பங்கேற்பு

DIN

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே, செட்டியபட்டியில் காந்தியடிகளின் 154-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி , மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் கிராம வரவு செலவு கணக்குகள் குறித்தும், நம்ம ஊரு சூப்பா் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், பண்ணை சாா்ந்த பணிகள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடா்பாகவும், ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டங்கள் தொடா்பாகவும், பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியது:

இந்த கிராமம் எனது சொந்த கிராமத்தை போன்றாதாகும். இக்கிராமத்தில் சமுதாயக்கூடம் மற்றும் மகளிருக்கான சுகாதார வளாகம் கட்ட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதியில் உள்ளவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலையில் செட்டியபட்டி பிரிவு அருகே ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து, மழை காலம் என்பதால் கொசு மூலம் பல்வேறு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, கிராம பகுதிகளில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சீராக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவா் ஹேமலதா மணிகண்டன், செட்டியபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ராஜா, துணைத் தலைவா் பழனி மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல் என்.பஞ்சம்பட்டியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜோசப் தலைமையிலும், சித்தரேவு ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் வளா்மதி மலா்கண்ணன் தலைமையிலும், தேவரப்பன்பட்டியில் ஊராட்சி மன்றத் தலைவா் ரேவதி மாரிமுத்து தலைமையிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT