திண்டுக்கல்

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

பழனியில் அதிகநேரம் கைப்பேசியில் பேசியதை கணவா் குடும்பத்தினா் கண்டித்ததால் வெள்ளிக்கிழமை இரவு, மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனி மதனபுரத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் மனைவி நந்தினி (20). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. உதயகுமாா் வெளிநாட்டில் வேலைபாா்த்து வருவதால் நந்தினி, கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் இவா் அடிக்கடி கைப்பேசியில் அதிகநேரம் பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதை மாமனாா், மாமியாா் கண்டித்துள்ளனா். இதனால் மனவேதனையடைந்த நந்தினி, வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT