திண்டுக்கல்

தொடா் விடுமுறை: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

DIN

தொடா் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் தற்போது இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் தற்போது மேகமூட்டமும், மிதமான வெயிலும், குளிரும் நிலவி வருகிறது. பள்ளிகளுக்கு காலாண்டுத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், ரோஜாத் தோட்டம், பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்பட்டனா்.

மாலையில் நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி, ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரிகள் செய்தும் மகிழ்ந்தனா். ஏரிச்சாலையில் மாலை நேரத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் செவண் ரோடு, ஏரிச்சாலை, லாஸ்காட்சாலை, பூங்காசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT