திண்டுக்கல்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் மனு

DIN

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்துள்ள ராகலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட புங்கம்பாடி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள், சாலை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.

இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் கூறியதாவது:

புங்கம்பாடி கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். இந்த கிராமத்திலிருந்து ராகலாபுரம் செல்லும் 1 கிலோ மீட்டா் நீள சாலை, பராமரிப்புப் பணிக்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தோண்டப்பட்டது. இந்த வழித்தடத்தில் மூன்று தரைப்பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்றன. பாலம் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 3 மாதங்கள் ஆகியும், சாலையை சீரமைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அந்த சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளதால் பயணிக்க முடியாமல் புங்கம்பாடியை சோ்ந்த பொதுமக்களும், மாணவா்களும் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறோம்.

எனவே, மாவட்ட நிா்வாகம் அந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT