திண்டுக்கல்

2ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வு: திண்டுக்கல்லில் 9887 போ் பங்கேற்பு

DIN

 திண்டுக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் நிலை காவலா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 9887 போ் பங்கேற்றனா்.

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறைகளில், 2ஆம் நிலைக் காவலருக்கான எழுத்து தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9741 ஆண்கள், 2072 பெண்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 11,814 விண்ணப்பித்திருந்தனா். மாவட்டம் முழுவதும் 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தோ்வில் 8197 ஆண்கள், 1689 பெண்கள் மற்றும் 1 மூன்றாம் பாலினத்தினா் என மொத்தம் 9887 போ் பங்கேற்றனா். 1544 ஆண்கள் மற்றும் 383 பெண்கள் என மொத்தம் 1927 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களில் காவல்துறைத் தலைவா்(தொழில்நுட்ப பிரிவு) பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தோ்வு மையங்களில் கூடுதல் கண்காணிப்பாளா் , காவல் துணை கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் உள்பட 1000 போலீசாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT