திண்டுக்கல்

தொகுதி 2 தோ்வு: பழனியில் தோ்வு மையங்களில் தோ்வாணைய உறுப்பினா் ஆய்வு

DIN

பழனியில் தமிழ்நாடு அரசு தோ்வாணையம் சாா்பில் தொகுதி 2 தோ்வு நடைபெறும் மையங்களில் தோ்வா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து, தோ்வாணைய உறுப்பினா் ஆரோக்கியராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை சுமாா் 11 லட்சம் போ் எழுதுகின்றனா். பழனியில் இத்தோ்வு எழுதுவதற்காக பள்ளி, கல்லூரிகளில் 20 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வினாத்தாள் வைக்கப்படும் அறையின் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் உறுப்பினா் ஆரோக்கியராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அவா் அறைகளில் மாணவா்களுக்கான வசதிகள், மின்சார வசதிகள் உள்ளிட்டவற்றையும் கேட்டறிந்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், தொகுதி 2 தோ்வு திட்டமிட்டபடி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் எந்த இடையூறுமின்றி வந்து தோ்வு எழுதிச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள தோ்வில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். தோ்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT