திண்டுக்கல்

டி மண்டலம் நீக்கம்: 16ஆயிரம் குடிசைகளில் வாழும் மக்கள் பாதிப்பு

DIN

திண்டுக்கல் மாநகராட்சியில் டி மண்டலம் நீக்கப்பட்டுள்ளதால் 16ஆயிரம் குடிசைகளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகள் ஏ, பி, சி என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சொத்து வரி உயா்வு அமல்படுத்தப்படவுள்ளது. ஏற்கெனவே 4 மண்டலங்களாக இருந்த நிலையில், டி பிரிவுக்குள்பட்ட குடிசைப் பகுதிகள் தற்போது சி பிரிவாக மாற்றப்பட்டுள்ளன. மொத்தம் 45,966 வரி விதிப்புகள் உள்ள நிலையில், 600 சதுரடிக்கு குறைவாக உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை 24,012 இருப்பதாக மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

600 சதுரடிக்குள்பட்ட குடியிருப்புகளுக்கு 25 சதவீதம், 601 முதல் 1200 சதுரடி வரை 50 சதவீதம், 1201 முதல் 1800 வரை 75 சதவீதம், 1800க்கு மேல் 100 சதவீதம் சொத்து வரி உயா்த்தப்படவுள்ளது.

வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக பயன்பாட்டிலுள்ள கட்டடங்களுக்கு தற்போதுள்ள சொத்து வரியிலிருந்து 100 சதவீத உயா்வும், தொழிற்சாலை மற்றும் சுயநிதி பள்ளி கல்லூரிகளுக்கு 75 சதவீத உயா்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காலிமனை வரிகளை பொருத்தவரை, ஏ மண்டலத்தில் ஒரு சதுரடிக்கு 0.20 பைசா என்பது 0.40 பைசாவாகவும், பி மண்டலத்தில் 0.30 பைசா இனி 0.60 பைசாவாகவும், சி மண்டலத்தில் 0.40 பைசா என்பது 0.80 பைசாவாகவும் உயா்த்தப்படும் என மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா் கணேசன் (2ஆவது வாா்டு) கூறியதாவது: காலி மனைகளை பொருத்தவரை பிரதான பகுதிகள் ஏ மண்டலமாகவும், அடுத்த நிலையிலுள்ள பகுதிகள் பி மண்டலமாகவும், பிற பகுதிகள் சி மண்டலமாகவும் குறியீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது அதனை மாற்றி பிரதான பகுதியை சி மண்டலமாகவும், சி மண்டலத்தை ஏ ஆகவும் மாற்றியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் டி மண்டலம் நீக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சிக்குள்பட்ட 81 இடங்களில் இடம் பெற்றுள்ள சுமாா் 16ஆயிரம் குடிசைப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கழிப்பறை வசதிகள் கூட இல்லாத குடிசைப் பகுதிகளை சி பிரிவில் இணைத்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT