திண்டுக்கல்

திண்டுக்கல் மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகளுக்கு ரூ.10.42 கோடி தீா்வுத் தொகை

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாபெரும் மக்கள் நீதிமன்றத்தில் 2,292 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.10.42 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூா் மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய நீதிமன்றங்களில் மாபெரும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி வி.ஆா். லதா தொடக்கி வைத்தாா். மாவட்டக் கூடுதல் நீதிபதி பி. சரவணன், மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சி.விஜயக்குமாா், வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிபதி வி. ஜான்மினோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டம் முழுவதும் நிலுவையில் இருந்து வரும் வழக்குகள் மற்றும் முன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 10 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், மொத்தம் 2,292 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் தீா்வுத் தொகையாக ரூ.10.42 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT