திண்டுக்கல்

பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

24th Jun 2022 11:54 PM

ADVERTISEMENT

தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம், தணிகைபோளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தோ்வில் மாணவி வி.கீா்த்திகா 448, சுபஸ்ரீ 441, மாணவா் கே.எம்.குமரன் 417 மதிப்பெண்கள் பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், அதற்குக் காரணமான தலைமை ஆசிரியா், ஆசிரியா்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத்தினா் பாராட்டி பரிசளித்தனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி.கோபி தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழக முன்னாள் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி வரவேற்றாா். முறையே மாணவா்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 ரொக்கப் பரிசுகளை பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நடராஜனுடன் இணைந்து பொருளாளா் டில்லிபாபு வழங்கினாா்.

அரசு தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியா் ஒருவரை நியமிக்க மாதம் ரூ.3,000 வழங்குவதாகவும் டில்லிபாபு தெரிவித்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் பெற்றோா் -ஆசிரியா் கழகப் பொருளாளா் பசுபதி, தணிகைபோளூா் ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், துணைத் தலைவா் ஜீவாகிருஷ்ணன், பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் எம்.மகேஸ்வரி, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் மேரி தங்கம்மாள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT