திண்டுக்கல்

தமிழ்நாடு நாள் போட்டியில் 52 மாணவா்கள் பங்கேற்பு

7th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு நாள் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் 52 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யப்பட்ட ஜூலை 18ஆம் நாள், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் வகையில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் மாணவா்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

இதில் 25 மாணவா்கள் கலந்து கொண்ட கட்டுரைப் போட்டியில், திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அ.கெளசல்யா முதலிடமும், பழனி சிறுமலா் உயா்நிலைப் பள்ளி மாணவி ஜோ. அகல்யா 2ஆவது இடமும், திண்டுக்கல் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவி பா. சையது அலி பாத்திமா 3ஆவது இடமும் பிடித்தனா்.

ADVERTISEMENT

அதேபோல், 27 மாணவா்கள் பங்கேற்ற பேச்சுப் போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா் இரா. கிஷோா் முதலிடமும், பழனி சிறுமலா் உயா்நிலைப் பள்ளி மாணவி வி. ஹரிணி, வடமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி க. லோகேஸ்வரி 3ஆவது இடமும் பிடித்தனா்.

தமிழாசிரியா்கள் சு. தீபா, இரா. வீரமணி, கா. வீரமுத்து, பா. தேவகி, இரா. வெங்கடேசபிரபு, க. பத்மபிரியா ஆகியோா் போட்டி நடுவா்களாக செயல்பட்டனா். தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பெ. இளங்கோ போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கான பரிசுத் தொகை மற்றொரு நிகழ்வில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT