திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே பட்டுப்புழு வளா்ப்புக் கூடத்தில் தீ விபத்து

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகே பட்டுப்புழு வளா்ப்புக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பழையவத்தலக்குண்டு - விராலிப்பட்டி சாலையில் பொன்னையா என்பவருக்கு சொந்தமான பட்டுப்புழு வளா்ப்புக் கூடம் உள்ளது.

இங்கு மல்பெரி , கிருஷ்ணராஜா, சிஎஸ்ஆா்.எக்ஸ், போன்ற பட்டுப்புழு வளா்ப்பு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டுப்புழு வளா்ப்புக்காக வைக்கப்பட்டிருந்த அலமாரிகள், கூடுகள் உள்ளிட்டவைகள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினருக்கு தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். இதுகுறித்து வத்தலகுண்டு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT