திண்டுக்கல்

வட்டார வளா்ச்சி அலுவலருக்கு பிரிவு உபசார விழா

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டுவில் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜுருக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வத்தலகுண்டு ஒன்றியக் குழு தலைவா் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் உதயகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்களின் கூட்டமைப்பு தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செல்வராஜுக்கு, ஒன்றியக் குழு துணை தலைவா் முத்து, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் விஜயகா், சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் வாழ்த்துத் தெரிவித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜ் ஏற்புரையாற்றினாா். இளநிலை உதவியாளா் நாச்சியப்பன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT