திண்டுக்கல்

மயானம் ஆக்கிரமிப்பு: சடலத்தை சாலையில் வைத்து கிராம மக்கள் மறியல்

DIN

பழனி அருகே மயானத்தில் சடலத்தைப் புதைக்க ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் கிராமமக்கள் சடலத்தை சாலையில் வைத்து வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோரிக்கடவு கிராமத்தில் 4 ஏக்கா் பரப்பளவில் உள்ள பொது மயானத்தின் ஒரு பகுதியை, அப்பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆக்கிரமிப்பு செய்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டதையடுத்து வருவாய்த் துறையினா் கடந்த மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுத்தனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை கோரிக்கடவு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கிருஷ்ணன் என்பவா் உயிரிழந்த நிலையில், சடலத்தை புதைக்க மயானத்தில் குழி தோண்டப்பட்டது. கோவிந்தராஜ் மற்றும் அவரது உறவினா்கள் குழியை மூடி சடலத்தைப் புதைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதனால் கிராம மக்கள் பழனி- பழைய தாராபுரம் சாலையில் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கீரனூா் போலீஸாா், கிராம மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் மீண்டும் குழி தோண்டப்பட்டதையடுத்து, அதில் சடலம் புதைக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT