திண்டுக்கல்

15 ஆண்டுகளுக்குப் பின் கொடைரோடு அருகே காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான காளியம்மன், பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

கொடைரோடு அருகே பொட்டிசெட்டிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் சக்தி விநாயகா், பாலமுருகன், பொன்னழகு மாரியம்மன், காத்தாளம்மன், வெம்பலயப்பன், வெள்ளிமலை ஆகிய தெய்வங்களின் சந்நிதியும் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதன்கிழமை யாகசாலை பூஜைகள், ஆறுகால பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

வியாழக்கிழமை, சிறப்புப் பூஜைகள், பரிவா்த்தனைகள் செய்து பல்வேறு நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை மேளதாளம், வாணவேடிக்கை முழங்க ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சிறப்புப் பூஜைகள் யாகவேள்வி நடத்தப்பட்டு, கோயில் கோபுரக் கலசத்தில் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில், சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT