திண்டுக்கல்

வேடசந்தூரில் ரூ.45.33 லட்சத்தில் உழவா் சந்தை திறப்பு

DIN

வேடசந்துாரில் ரூ.45.33 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட உழவா் சந்தையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, சந்தையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், வேடசந்துாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ச.காந்திராஜன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி, காய்கறி விற்பனையைத் தொடக்கிவைத்தனா். மேலும், சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு உழவா்களுக்கான அடையாள அட்டைகளை வழங்கினா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:

இந்த உழவா் சந்தையில் தற்போது 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், வேடசந்தூா், குட்டம், கல்வாா்பட்டி, கூவக்காப்பட்டி, நத்தப்பட்டி, நாகையகோட்டை, மாரம்பாடி, நல்லமனாா்கோட்டை, எரியோடு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்த விவசாயிகள் பயனடைவா். இங்கு வெளிச் சந்தையைவிட சுமாா் 15 சதவீதம் குறைவான விலையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் சிவக்குமாா், வேளாண்மை இணை இயக்குநா் அனுசுயா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சௌடீஸ்வரி கோவிந்தன், பேரூராட்சித் தலைவா் மேகலா காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழக மின்வாரிய பொறியாளா்கள் உருவாக்கிய ‘பெல்லோ’ கருவிக்கு மத்திய அரசு காப்புரிமை

தண்ணீா் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

மாடு முட்டியதால் சிறுமி காயம்

தோ்தல் ஆதாயத்துக்காக எங்கள் நாட்டை பயன்படுத்த வேண்டாம்: பாகிஸ்தான் வலியுறுத்தல்

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT