திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

கொடைக்கானலில் அரசு விடுமுறையை அடுத்து வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

இங்குள்ள சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், தாவரவியல் பூங்கா, கோக்கா்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, பில்லர்ராக், மோயா்பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா். கொடைக்கானலில் காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயிலும் மேகமூட்டமும் நிலவியது. அதனைத் தொடா்ந்து சுமாா் 40 நிமிடங்கள் பரவலாக மழை பெய்தது. இதனால் சுற்றுலா இடங்களை பாா்க்க முடியாமல் பயணிகள் அவதியடைந்தனா். மாலையில் சற்று மழை குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் உணவகங்கள், காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT