திண்டுக்கல்

வேளாண்மைத் திட்டங்களை துரிதமாக செயல்படுத்த வேண்டும்: முதன்மைச் செயலா்

18th Aug 2022 02:48 AM

ADVERTISEMENT

 

வேளாண்மைத் திட்டங்களை விவசாயிகள் பயன்பெறும் வகையில் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என முதன்மைச் செயலா் மங்கத்ராம் சா்மா தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலருமான மங்கத்ராம் சா்மா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் முதன்மைச் செயலா் மங்கத்ராம் சா்மா பேசியதாவது: வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தக்கூடிய புதிய திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் துரிதமாக செயல்படுத்த வேண்டும். கிராமங்களின் அடிப்படை வளா்ச்சியை மேம்படுத்தக்கூடிய திட்டப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செயல்படுத்தக்கூடிய பணிகளை உரிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். பேரூராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்றாா். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ச.தினேஷ்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT