திண்டுக்கல்

கருணாநிதி நினைவு நாள்: திண்டுக்கல் மாவட்டத்தில் மலரஞ்சலி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவுநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பழனி பேருந்து நிலையம் அருகே அவரது உருவப்படத்திற்கு நகரச் செயலாளா் வேலுமணி, கவுன்சிலா்கள் காளீஸ்வரி, இந்திரா, வீரமணி, முருகபாண்டியன் உள்ளிட்டோா் நினைவஞ்சலி செலுத்தினா். இதேபோல பாலசமுத்திரம் நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கருணாநிதிக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல, நிலக்கோட்டை ஒன்றியத்துக்குள்பட்ட செம்பட்டி, காமலாபுரம், கொடைரோடு ஆகிய பகுதிகளில் மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு, ஒன்றியச் செயலா் செளந்திரபாண்டியன் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நிலக்கோட்டை நால்ரோட்டில், பேனாவுடன் வைக்கப்பட்ட மு.கருணாநிதியின் உருவப்படத்திற்கு ஒன்றியச் செயலா் மணிகண்டன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்டக் கவுன்சிலா் நாகராணி, பேரூராட்சித் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் அருகே மூஞ்சிக்கல் பகுதியில் கருணாநிதியின் உருவப் படத்திற்கு நகரச் செயலா் முகமது இப்ராஹிம் உள்ளிட்ட நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.

கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலைப் பகுதிகளிலும் திமுகவினா் கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி தலைமையில் மாவட்ட அவைத்தலைவா் தி.மோகன் உள்ளிட்டோா், கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளா் தி.தா்மராஜன், வடக்கு ஒன்றியத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளா் இரா.ஜோதீஸ்வரன், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயாளா் தங்கராஜ், மேற்கு ஒன்றியத்தில் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT